இந்தியா

மும்பை மின்தடை; மத்திய அதிகாரிகள் குழு செல்கிறது

செய்திப்பிரிவு

மும்பை மின்தடையை ஆய்வு செய்யவும், மாநில அரசுக்கு உதவவும் மத்திய அதிகாரிகள் குழு மும்பைக்கு செல்கிறது.

மும்பையில் ஏற்பட்ட மின்தடை குறித்து இன்று மதியம் பேசிய மத்திய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஆர் கே சிங், "மின்சார விநியோகம் (மும்பையில்) கணிசமான அளவுக்கு சீரமைக்கப்பட்டுள்ளது. தடைபட்ட 2000 மெகாவாட் மின்சாரத்தில், 1900 மெகாவாட் சீரமைக்கப்பட்டுள்ளது.

மீதமிருப்பது விரைவில் சரிசெய்யப்படும். தேசிய விநியோக அமைப்பு நன்றாக உள்ளது, மாநில விநியோக அமைப்பின் சில பகுதிகளில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது," என்றார்.

பிரச்சினையை கண்டறியவும், இத்தகைய தடைகளுக்கான சாத்தியமுள்ள தீர்வுகளை கண்டுபிடிக்கவும் மத்திய குழு ஒன்று மும்பைக்கு செல்லவிருக்கிறது என்று சிங் மேலும் கூறினார்.

SCROLL FOR NEXT