குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கோவிட்-19 தொற்று இல்லை என பரிசோதனை முடிவு வந்துள்ளதையடுத்து அவர் வழக்கமான பணிகளை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிற்கு கோவிட்-19 தொற்று இல்லை என்று மருத்துவ பரிசோதனையில் இன்று தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு இன்று அவருக்கும் அவரது மனைவி திருமதி உஷா நாயுடுவுக்கும் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இருவருக்கும் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வெங்கய்ய நாயுடுவின் உடல்நிலை சீராக இருப்பதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் தமது பணிகளை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.