இந்தியா

காணாமல் போன தமிழக விஞ்ஞானி விஜயவாடாவில் கண்டுபிடிக்கப்பட்டார்

பிடிஐ

கடந்த அக்டோபர் 6 -ம் தேதி முதல் காணாமல் போன தமிழக விஞ்ஞானி விஜயவாடாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கர்நாடகா போலீசார் தெரிவித்தனர்.

மைசூருவில் பாபா அணு ஆய்வு மையத்தில் பணியாற்றிவந்த 26 வயது இளம் விஞ்ஞானி அபிஷேக் ரெட்டி குல்லா தமிழகத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

அபிரேஷக் ரெட்டி குல்லா, திடீரென கடந்த செப்டம்பர் 17 -ம் தேதி முதல் வேலைக்கு வரவில்லை என்று பாபா அணுமின் நிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த அக்டோபர் 6-ம் தேதி அபிஷேக் ரெட்டி தனது பணப்பையை மற்றும் மொபைல் போனை கூட எடுத்துக் கொள்ளாமல் இரு சக்கர வாகனம் ஒன்றில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் அதன்பிறகு அபிஷேக் ரெட்டி வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அவரது மேலதிகாரி டி.கே.போஸ் மைசூரு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார், அதன் அடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசித் தேடத் தொடங்கினர்.

இதுகுறித்து கர்நாடக காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் கூறியதாவது: "அபிஷேக் ரெட்டி குல்லா விஜயவாடாவின் ஏதோ ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் மைசூரு செல்லும் வழியில் இருந்தார். அவர் மைசூருவில் வாடகைக்கு ஒரு அறையை எடுத்துக் கொண்டு அங்கு தங்கியிருந்தார்.

மைசூருவில் இருந்து அவர் விசித்திரமாக காணாமல் போனதற்கு உரிய காரணங்கள் தெரியவில்லை. அவர் இங்கிருந்து எப்படி காணாமல் போனார் என்பது குறித்தும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதுகுறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்" என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

SCROLL FOR NEXT