இந்தியா

கரோனா தொற்று பரவிவரும் நிலையில் பண்டிகைகளை பாதுகாப்பாக மக்கள் கொண்டாட வேண்டும்: சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அழைப்பு

செய்திப்பிரிவு

கரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று கூறி யுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பண்டிகைகளை பாதுகாப்பாக கொண்டாடுவோம் என பொதுமக் களை கேட்டுக் கொண்டுள்ளார்.

'ஞாயிறு உரையாடல்' என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிற் றுக்கிழமையன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உரையாற்றுவார். நவராத்திரி உட்பட பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், நேற்று ஹர்ஷ் வர்தன் ஆற்றிய உரையில் கூறியதாவது:

பண்டிகைக் காலம் நெருங்கி வருகிறது. பண்டிகை காலத்தின் போது பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். எந்த மதமோ அல்லது கடவுளோ ஆடம்பரமாக பண்டிகை கொண் டாட வேண்டும் என்று கூற வில்லை. உயிரைப் பணயம் வைத்து பண்டிகை கொண்டாட வேண்டுமா?

ஒன்றுபட்டு போராடுவோம்

எனவே, பண்டிகைகளை பாதுகாப்புடன் கொண்டாடுவோம். கரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். கரோனாவுக்கு எதி ராக போராடுவதுதான் இப்போது நமது மிக முக்கிய கடமை. கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைபிடித்து விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

உலகமே கரோனாவுக்கு எதி ராக போராடி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியா மிகத் தீவிரமாக போராடி வருகிறது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியதற் காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

கரோனாவுக்கு தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பொருளாதாரத்தை மேம்படுத்த தடுப்பு மருந்து வழங்குவதில் இளைஞர்களுக்கும் பணியாளர் களுக்கும் முன்னுரிமை அளிக்கப் படும் என்று வரும் செய்திகள் தவறானவை. அப்படி எதுவும் திட்டம் இல்லை.

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோருக்கு அதன் தீவிரத் தன்மையை பொறுத்தும் உயி ரிழப்புகளை தடுக்கும் வகையிலும் தடுப்பு மருந்து அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

SCROLL FOR NEXT