எதிரிப்படைகளைக் கொல்லும்வகையிலான தாக்குதல்கள், பதிலடி தாக்குதல்களுக்கு ட்ரோன்களே சிறந்த தீர்வு. இவை காலத்தின் தேவை என்று ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி கூறியுள்ளார்.
மத்திய அரசின் சார்பில் கூட்டு போர் ஆய்வுகள் மையம் ஏற்பாடு செய்த இணையதளக் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி கூறியதாவது:
''சியாச்சின் பனிப்பாறையின் உயரமான பகுதிகளில் நமது ராணுவம் பல ஆண்டுகளாக 20,000 அடி உயரத்தில் துருப்புகளைப் பராமரித்து வருகிறது.
சீனாவுடனான தொடர்ச்சியான மோதல் காரணமாக கிழக்கு லடாக்கில் அதிக உயரமுள்ள பகுதிகளில் துருப்புகளை வலுப்படுத்த ராணுவம் முயன்று வருகிறது. அங்கு ஏராளமான வீரர்கள் பாதுகாப்புப் பணிக்குச் செல்கின்றனர். அவ் வீரர்களுக்கான சிறப்பு ஆடை மற்றும் மலையேறும் கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைப்பதுதான் நமது வீரர்கள் தன்னம்பிக்கை அடைய உதவும். அவை இனி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும்.
நமது துருப்புகளில் ஏராளமானோர் மைனஸ் 50 செல்சியஸ் வெப்பநிலையில் மிக உயரமான பகுதிகளில் நிறுத்தப்படுகிறார்கள். இதற்காக, நமது அரசு இன்னும் குளிர்ந்த காலநிலை உபகரணங்களை இறக்குமதி செய்கிறது, இவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வீரர்களுக்கு வழங்கினால் அவர்கள் தன்னம்பிக்கையோடு பணியாற்றுவர். ஆத்மனிர்பர் பாரத் எனப்படும் தற்சார்பு இந்தியா கொள்கையை நிறைவேற்ற ஒரு கூட்டு முயற்சி தேவை.
மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை மலைகளில் இழுத்துச் செல்வது பயங்கரவாதிகள் மற்றும் தேசவிரோத சக்திகளுக்கு சாதகமாகவே முடியும். இது உடல் மற்றும் உளவியல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நம் ராணுவத்தினரின் பாதுகாப்பிற்கான பற்றாக்குறையான வளங்களைச் செய்யும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம் தயார்நிலையைத் தீவிரமாகப் பாதிக்கிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் மாற்றுவழிகள் தேவை.
ட்ரோன்கள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு இத்தகைய அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கான திறவுகோலாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மற்ற அச்சுறுத்தல்களுக்கிடையில், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் எதிரிகளைத் தாக்கும் அழிவுகரமான ஆற்றலில் தனித்து நிற்கின்றன. அவற்றின் குறைந்த விலை, பல பயன்பாடு மற்றும் அடர்த்தியான பெருக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடியாக இந்தப் புதிய தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.
அவற்றின் திரள் தொழில்நுட்பம் உட்பட, எதிரிப்படைகளைக் கொல்லும் வகையிலான தாக்குதல்கள் பதிலடி தாக்குதல்களுக்கு ட்ரோன்களே சிறந்த தீர்வு. இவை காலத்தின் தேவை".
இவ்வாறு ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சைனி தெரிவித்தார்.