இந்தியா

முஜாகிதீன் தீவிரவாதி சுட்டுக் கொலை: காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரரும் பலி

பிடிஐ

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று 9 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண் டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிர வாதி ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டார். பதில் தாக்குதலில் ஒரு ராணுவ வீரரும் பலியானார்.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறி யிருப்பதாவது:

பாரமுல்லா மாவட்டம் ரபியாபாத் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை 7 மணியளவில் அப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாது காப்புப் படையினர் மீது துப்பாக்கி யால் சுட்டனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

சுமார் 9 மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு தீவிரவாதி யும் ஒரு ராணுவ வீரரும் பலியாயி னர். பலியான தீவிரவாதி சோபோர் அருகே உள்ள பிரத் கலன் பகுதி யைச் சேர்ந்த ரியாஸ் அகமது என்றும் இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

லஷ்கர்-இ-இஸ்லாம் (எல்இஐ) தீவிரவாதியும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய தீவிர வாதி கயூம் நஜாருக்கு நெருக்க மானவருமான இம்தியாஸ் அகமது கண்டூ ரபியாபாத் பகுதியில் இருப்பதாக உளவுத் துறையிடமிருந்து தகவல் வந்தது.

இவர்கள் இருவரும் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சையது சலாஹுதீனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எல்இஐ அமைப்பை தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

சோபோர் நகரில் பிரிவினை வாதிகள் மற்றும் முன்னாள் தீவிர வாதிகள் ஆறு பேரை கொலை செய்த வழக்கில் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அத் துடன் இவர்களது தலைக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப் பட்டு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT