உலக அஞ்சல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செய்தியில், “இந்தியாவை இணைப்பதில் இந்திய அஞ்சல்துறை ஊழியர்களின் முயற்சி களுக்காக நாம் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம்.
எண்ணற்ற மக்களுக்கு அவர்கள் மகிழ்ச்சியை கொண்டு வருகின்றனர். உலக அஞ்சல் தினத்தில்அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலைப்பின்னலாக விளங்கும் இந்திய அஞ்சல் துறையின் ஊழியர்கள் தொற்றுநோய் காலத்திலும் சிறந்த சேவையாற்றியுள்ளனர்.
இதற்காக அவர்கள் அனை வரையும் உலக அஞ்சல்தினத்தில் வாழ்த்த விரும்புகிறேன்.தொற்றுநோய் காலத்தில் தேசப்பணியில் உயிரிழந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
கரோனா தொற்று ஆபத்து மிகுந்த கடந்த சில மாதங்களில் நாட்டுக்கு அஞ்சல் துறையினரின் பங்களிப்பை விளக்கும் வீடியோ பதிவு ஒன்றையும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ளார்.