சண்டிகர் விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைத்தார்.
சர்வதேச விமானங்கள் இயக்குத்துக்காக விரைவில் இந்த புதிய முனையத்தின் சேவை துவங்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோடியுடன், ஹரியாணா மாநில ஆளுநர் கப்தான் சிங் சோலன்கி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் கஜபதி ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.
விமான நிலைய விரிவாக்கம், வீட்டுவசதி திட்டம் போன்றவற்றை துவக்கி வைக்க பிரதமர் சண்டிகர் நகருக்கு வருகை தந்துள்ளார். அவரது வருகையை ஒட்டி சண்டிகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.