இந்தியா

ஜீன்ஸ், டீ-ஷர்ட், செல்போன் பயன்படுத்த பெண்களுக்கு தடை: உத்தரப் பிரதேச கிராம சபை உத்தரவு

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு முஸ்லிம் கிராம சபை, பெண்கள் செல்போன் பயன்படுத் தவும் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டீ-ஷர்ட் அணியவும் தடை விதித்துள்ளது.

முசாபர் நகர் மற்றும் சஹாரன்பூர் மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இது போன்ற தடை அமலில் இருப்ப தாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம சபை தலைவர் முகமது இர்பான் கூறும் போது, “இஸ்லாமிய சட்டப்படி திருமணமாகாத பெண்கள் ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணியக்கூடாது. இத்தகைய ஆடைகளை நகரங் களில் வேண்டுமானால் அனுமதித் திருக்கலாம். ஆனால் நாங்கள் கிராமத்தில் வசிக்கிறோம். எனவே இங்கு அத்தகைய ஆடைகளை அணிய கிராம சபை முற்றிலும் தடை விதித்துள்ளது” என்றார்.

மேலும் திருமணமாகாத பெண் கள் செல்போன் பயன்படுத்துவ தால், பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அதற்கும் தடை விதித்துள்ளதாகவும் கிராம சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிராமவாசியான முகமது அக்பர் கூறும்போது, “திருமணமாகாத பெண்கள் செல் போன் பயன்படுத்துவது நல்லதல்ல. அவர்கள் ஆண்களுடன் பேசினால், தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்” என்றார்.

மேலும் வரதட்சணை வாங்க தடை விதித்துள்ள கிராம சபை, குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க வலியுறுத்தி உள்ளது.

பணக்காரர்கள், உயர் சாதியினர், முதியவர்களை உள்ளடக்கிய சில கிராம சபைகள் அல்லது கட்ட பஞ்சாயத்து அமைப்புகள், நடைமுறை நீதிமன்றங்கள் போல செயல்படுகின்றன. ஏழை, படிப்பறி வில்லாத மக்களுக்கு நீதித் துறை யின் சேவை கிடைக்காத பகுதி களில், நிலம், திருமணம், கொலை உட்பட பல்வேறு பிரச்சினைகளை இந்த கிராம சபைகளே தீர்த்து வைக்கின்றன.

இந்த முடிவுகள் சில நேரங்களில் பொதுமக்களின் சுதந்திரத்துக்கும் அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானதாக அமைந்து விடுகிறது. கிராம சபை உத்தரவை கடைப்பிடிக் காதவர்கள் சமூகத்தில் புறக்கணிக் கப்படுகிறார்கள்.

SCROLL FOR NEXT