பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா அதிபர் விளாடிமர் புதினுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
ரஷ்ய அதிபரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.
விளாடிமர் புட்டீனுடனான தமது நீண்ட கால நட்பை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளிடையேயான நல்லுறவை மேம்படுத்த அவர் எடுத்துவரும் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.
கோவிட்-19 காரணமாக இரு நாடுகளும் சந்தித்து வரும் சவால்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் வரும் நாட்களில் கலந்தாலோசிப்பதாக தெரிவித்தனர். நாட்டில் இயல்புநிலை திரும்பியவுடன் அதிபர் விளாடிமிர் புதினை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.