இந்தியா

வெஸ்டாஸ் நிறுவன தலைவருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி, வெஸ்டாஸ் நிறுவன தலைவர் ஹென்ரிக் ஆண்டர்சனுடன் காற்றாலை மின்சாரத்துறை தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், "வெஸ்டாஸ் நிறுவன தலைவர் ஹென்ரிக் ஆண்டர்சனுடன் உள்ளார்ந்த கலந்துரையாடலை நிகழ்த்தினேன். காற்றாலை மின்சாரத் துறை சம்பந்தமாக பல்வேறு விஷயங்களை நாங்கள் விவாதித்தோம்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான சுற்றுச்சூழல் வழங்க இந்தியா மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை அவருக்கு கோடிட்டுக் காட்டினேன்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT