இந்தியா தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக, கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை, 10 லட்சத்துக்கும் கீழ் இந்தியா பராமரிக்கிறது.
மத்திய அரசின் பரிசோதனை, கண்காணிப்பு,கண்டுபிடிப்பு, மற்றும் சிகிச்சை தொழில்நுட்ப யுக்திகளை மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்றி வருகின்றன. இதனால் நல்ல முடிவுகள் ஏற்பட்டுள்ளன. நிலையான சிகிச்சை நெறிமுறைகளையும், மத்திய அரசு வழங்கியுள்ளது. அது நாடு முழுவதும் தரமான சிகிச்சையை உறுதி செய்துள்ளன.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 76,737 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், 74,442 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் இன்று வரை மொத்தம் 55,86,703 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒரே நாளில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், குணடைபவர்களின் தேசிய சராசரி தொடர்ந்து அதிகரித்து தற்போது 84.34%-ஆக உள்ளது.
புதிதாக குணமடைந்தவர்களில் 75% பேர், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,34,427-ஆக உள்ளது. இன்றுவரை, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, நாட்டின் மொத்த பாதிப்பில் 14.11%-மாக உள்ளது. இந்த அளவு தொடர்ந்து கீழ் நோக்கி செல்கிறது.
சிகிச்சை பெறுபவர்களில் 77% பேர் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 74,442 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 78% பேர் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ளனர். மகாராஷ்டிராவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 903 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 82% பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.