இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் வீரகள் கடும் துப்பாக்கிச் சண்டை

பீர்சதா ஆஷிக்

ஜம்மு காஷ்மீரின் ராஃபியாபாதில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள லாதுரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்தத் தகவலை அடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

தீவிரவாதிகள் 2 பேர் அங்கு பதுங்கியிருந்ததை அடுத்து அவர்கள் மீது பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பிடிக்க அங்கு கூடுதல் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த நவீத் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் ஏற்கனவே ராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டனர். தொடந்து கடந்த வாரம் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டும் ஒருவர் உயிரோடும் இதே ராஃபியாபாதில் பிடிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT