இந்தியா

வாட்ஸ்ஆப் கட்டுப்பாடு: நடுநிலையான அணுகுமுறை தேவை

செய்திப்பிரிவு

வாட்ஸ்ஆப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள தகவல் பரிமாற்றங்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற வரைவு கொள்கையை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.

புதிய வரைவுக் கொள்கையானது மக்களின் அந்தரங்கத்தில் தலையிடும் வகையில் உள்ளது என்று பெரும்பாலானோர் குற்றம் சாட்டியதன் எதிரொலியாக, மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. | விரிவான செய்தி:>வாட்ஸ் ஆப் மெசேஜ்களை அழிக்கக் கட்டுப்பாடு: பின்வாங்கியது மத்திய அரசு

இதுகுறித்து பாதுகாப்பு மற்றும் கணினிசார் தொழில்நுட்ப நிபுணர் சையது முகமது கூறியதாவது:

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு சர்வதேச நாடுகளின் தலைவர்களையும் சொந்த நாட்டு மக்களையும் இணையம் வழியாக உளவு பார்த்த விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க உளவு நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல செயல்பட அந்த நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அங்கு நாட்டின் பாதுகாப்பு, மக்களின் அந்தரங்கம் ஆகியவற்றில் நடுநிலை பின்பற்றப்படுகிறது.

நமது நாட்டில் சமூகவலைதள தகவல் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்து வதற்கு முன்பு தேசிய அளவில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம். பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், சட்ட நிபுணர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், கணினி தொழில்நுட்ப நிபுணர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்த பிறகே சட்ட முன்வடிவை வரையறுக்க வேண்டும். அப்போதுதான் அது நடுநிலையானதாக இருக்கும்.

SCROLL FOR NEXT