இந்தியா

தீவிரமடையும் இட ஒதுக்கீடு கோரிக்கை: வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும் போராட்டம் - படேல் சமூகத்தினருக்கு எஸ்பிஜி அழைப்பு

பிடிஐ

இட ஒதுக்கீடு கோரும் போராட் டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, வங்களில் உள்ள பணத்தை எடுத்து, பொருளாதார ஒத்துழையாமை இயக்க போராட் டத்தில் ஈடுபடும்படி படேல் சமூகத்தினருக்கு, சர்தார் படேல் குழு (எஸ்பிஜி) அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக லால்ஜி படேல் தலைமை யிலான எஸ்பிஜி செய்தித் தொடர்பாளர் வருண் படேல் கூறியதாவது: இடஒதுக்கீடு தொடர்பாக எங்களது கோரிக்கையை மாநில அரசு காதில் போட்டுக்கொள்ள வில்லை. எனவே, எங்கள் சமூகத் தினர் வங்கியிலுள்ள தங்கள் பணத்தை எடுக்கும்படி அழைப்பு விடுத்துள்ளோம். எங்க ளுக்குத் தெரிந்தவரையில் படேல் சமூகத்தினருக்கு 70 லட்சம் வங்கிக் கணக்குகள் உள்ளன. அவற்றில் சராசரியாக ரூ.50 ஆயிரம் இருந்தாலும், மொத்த டெபாசிட் தொகை ரூ.350 கோடி இருக்கும்.

எங்களின் இந்த கோரிக்கைக்கு படேல் சமூக மக்கள் நிச்சயம் செவிசாய்ப்பார்கள். ஏற்கெனவே சிலர் வங்கியிலிருந்து பணத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த பொருளாதார ஒத்துழை யாமை போராட்டத்துக்கு குஜராத் தொழில் வர்த்தக சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT