இந்தியா

பிஹார் பேரவைத் தேர்தல்: மெகா கூட்டணியில் தொகுதி உடன்பாடு; காங்கிரஸுக்கு 70, இடதுசாரி கட்சிகளுக்கு 30

செய்திப்பிரிவு

பிஹார் பேரவைத் தேர்தலில் காங் கிரஸுக்கு 70, இடதுசாரி கட்சிகளுக்கு 30 தொகுதிகளை ஒதுக்க மெகா கூட்டணி முடிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

பிஹார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங் களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. முதல்கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக் டோபர் 28-ம் தேதியும், 2-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதியும், 3-ம் கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதியும் தேர்தல் நடக்க உள்ளது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

இந்தத் தேர்தலில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சி கள் இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன. மெகா கூட்டணி கட்சி களின் தலைவர்கள் கூடி தொகுதிப் பங்கீடு குறித்து ஏற்கெனவே ஆலோ சனை நடத்தியுள்ளனர். இதில் முடிவு ஏற்படாததால் நேற்று முன்தினம் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு 70, இடதுசாரிகளுக்கு 30 தொகுதிகள் தர முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளி யாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

இதுபோல, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.-பிடிஐ

SCROLL FOR NEXT