பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

மருத்துவ தாவரங்கள்; புனேவில் ஆய்வு மையம் தொடக்கம்

செய்திப்பிரிவு

மருத்துவ குணமுள்ள தாவரங்களுக்கான மேற்கு பிராந்திய மையத்தை சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கொட்டேச்சா தொடங்கி வைத்தார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ குணமுள்ள தாவரங்கள் வாரியத்தின் கீழ் இந்த மையம் செயல்படும்.

நாலந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் விஜய் பட்கர், தாவரவியல் துறையின் தலைவரும் மருத்துவ குணமுள்ள தாவரங்களுக்கான பிராந்திய மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் டாக்டர் ஏ பி அடே, தேசிய மருத்துவ குணமுள்ள தாவரங்கள் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் ஜெ எல் சாஸ்திரி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய கொட்டேச்சா, மருத்துவ குணமுள்ள தாவரங்களை பயிரிடுவதில், வாரியத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்வதில் மருத்துவ குணமுள்ள தாவரங்களுக்கான பிராந்திய மையம் பெரும் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார்.

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் மருத்துவ குணமுள்ள தாவரங்களைப் பயிரிடுவதற்கு ஆயுஷ் அமைச்சகம் ஊக்கம் அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT