இந்தியா

வகுப்பறையில் பூட்டிய விவகாரம்: மாணவருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு

பிடிஐ

ஆறாம் வகுப்பு மாணவரை கவனக்குறைவால் வகுப்பறையில் பூட்டிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

டெல்லியின் முகர்ஜி நகரில் உயர்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி மாலை பள்ளி ஆசிரியர் ஒருவர் கவனக்குறைவாக ஆறாம் வகுப்பு மாணவரை வகுப்பறையில் பூட்டிவிட்டு சென்றுவிட்டார். ஒருநாள் இரவு முழுவதும் உணவு, தண்ணீர், மின்சார வசதியின்றி இருட்டில் இருந்த அந்த மாணவர் பயத்தில் மயங்கி விழுந்துவிட்டார். அடுத்த நாள் காலையில் மீட்கப்பட்ட மாணவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது. இதுகுறித்து டெல்லி அரசு அளித்த பதிலில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு அவருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட ஆணையம், பாதிக்கப் பட்ட மாணவருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று டெல்லி மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டது.

இதுபோன்ற தவறுகள் இனி மேல் நேரிடாதபடி ஆசிரியர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT