தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளராக அபூர்வ சந்திரா பொறுப்பேற்றார்.
இந்திய ஆட்சிப் பணியின் (ஐஏஎஸ்) மகாராஷ்டிரா பிரிவின் 1988-ஆம் ஆண்டைச் சேர்ந்த அதிகாரியான அபூர்வ சந்திரா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் புதிய செயலாளராக இன்று பொறுப்பேற்றார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் பிரிவின் சிறப்பு தலைமை இயக்குநராக இதற்கு முன் இவர் பணியாற்றினார்.
அப்போது, தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தளவாடங்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் அளிப்பதிலும், அதேசமயம் அனைத்து சவால்களையும் எதிர் கொள்ளும் வகையில் நமது பாதுகாப்பு படைகளை வலுப்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றினார்.
சிவில் பொறியாளரான சந்திரா, இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை தில்லியில் உள்ள ஐஐடியில் படித்தார். மகாராஷ்டிரா மற்றும் மத்திய அரசுகளில் பணிபுரிந்த போது, தொழிற்சாலைகள் சார்ந்த விஷயங்களை கையாளுவதில் இவர் மிகவும் அனுபவம் பெற்றவர்.
இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் சந்திரா பணிபுரிந்துள்ளார். முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் அவர் ஈடுபட்டிருந்தார்.