உத்தரப் பிரதேச தலித் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம் பெரிதாகி வருகிறது, அந்தப் பெண்ணின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்காமல் தகனம் செய்தது கடும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கிளப்பிவருகிறது.
இந்நிலையில் பலியான பெண்ணின் கிராமத்துக்குள் ஊடகங்கள் செல்ல யோகி ஆதித்யநாத் அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், “ஊடகங்கள் தலித் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிலபல விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. சில உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறது.
யோகி ஆதித்யநாத்தின் காட்டாட்சியையும் ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. எனவே தற்போது ஊடகம் தடை செய்யப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளது.
உ.பி. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அஜய் குமார் லாலு, “அதிகாரத்தைக் காத்துக் கொள்ள உண்மைகள் எரிக்கப்படுகின்றன. உ.பி.யின் மகள்கள் வன்கொடுமை அனுபவிக்க அதிகாரமே காரணம். அரசிடம் உணர்வோ, அறமோ எதுவும் இல்லை.
குடியரசுத் தலைவர் ஆட்சிதான் பொருத்தமாக இருக்கும்.
காங்கிரஸ் கமிட்டியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர், ஹத்ரஸ் மாவட்டத்தின் புல்கார்ஹி கிராமத்துக்குள் ஊடகங்கள் செல்லக் கூடாது என்று தடை செய்துள்ளார் என்று பதிவிட்டார்.
இந்தச் சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்துள்ளது.