தெலங்கானா மாநிலம் வாரங்கல் வனப்பகுதியில் நேற்று காலை நடைபெற்ற என்கவுன்ட்டரில் ஒரு பெண் உட்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கரீம்நகர், கம்மம், வாரங்கல், ஆதிலாபாத் ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உதயமான பின்னர் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறைந்துள்ளதாகவும், இவர்கள் ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக வாரங்கல் மாவட்டம், தாதய்ய மண்டல வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி. அம்பர் கிஷோர் ஜு உத்தரவின் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீஸார் வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவு மாவோயிஸ்டுகளுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் ஒரு பெண் உட்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து அங் கிருந்து தப்பிச் சென்ற மாவோயிஸ்டுகளை அதிரடிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.