சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறை வேற்றுவதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன் கூட்டியே கூட்ட அரசு தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக கொல்கத்தாவில் நேற்று நடை பெற்ற கருத்தரங்கில் வெங்கய்ய நாயுடு பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஜிஎஸ்டி மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் நிறை வேறிவிட்டது. ஆனால் மாநிலங் களவையில் நிறைவேறவில்லை. எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்த மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்பப் பட்டது.
தேர்வுக் குழு தனது அறிக்கையை மாநிலங்களவை யில் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அர்த்தமற்ற காரணங்களுக்காக இந்த மசோதாவை எதிர்க்கிறது. ஜனநாயக நாட்டில் எந்த ஒரு மசோதாவையும் எதிர்ப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதேநேரம் தங்கள் கருத்துகளை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கலாம். அதைவிடுத்து அவையை முடக்கக்கூடாது.
இதுதொடர்பாக ஆனந்த் சர்மா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் நானும் அருண் ஜேட்லியும் பேசி உள்ளோம். எனவே, இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படும்.
நிலக்கரி மசோதா மற்றும் சுரங்க மசோதா ஆகியவற்றுக்கும் எதிர்க்கட்சிகள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் 2 மசோதாக்களுக்கும் ஆதரவு அளித்தனர்.
எனவே, ஒருமித்த கருத்து எட்டப்பட்டால் ஜிஎஸ்டி மசோ தாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்கூட்டியே கூட்டுவ தற்கு அரசு தயாராக உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய ஆவணங்களை வெளி யிடப் போவதாக மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது வரவேற் கத்தக்கது. நேதாஜி மர்மமான முறையில் மாயமானது தொடர்பான ரகசியம் ஒரு நாள் அம்பலமாகும் என்று நம்புகிறேன். அதேநேரம் சர்வதேச நாடுகளுடன் நேரடி உறவை பராமரிக்க வேண்டிய நிலை இல்லை என்பதால், நேதாஜி ஆவணங்களை வெளியிடுவதால் மாநில அரசுக்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது. ஆனால் மத்திய அரசுக்கு இதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் எப்படிப்பட்ட சிக்கல் எழும் எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.