இந்தியா

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா உறுதி

செய்திப்பிரிவு

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜக முதல்வர்கள் எடியூரப்பா, சிவராஜ் சிங் சவுகான் உட்பட பல்வேறு தலைவர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்தநிலையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியரசுத் துணைத் தலைவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.

அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா நோய்க்கான தீவிர அறிகுறி இல்லாத நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது மனைவிக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT