மெஹ்பூபா முப்தி. 
இந்தியா

மெஹ்பூபா முப்தி தடுப்புக் காவல் விவகாரம்: மகளின் கோரிக்கைக்கு என்ன பதில்?- காஷ்மீர் நிர்வாகத்தைக் கேட்ட உச்ச நீதிமன்றம் 

பிடிஐ

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி ஜம்மு காஷ்மீர் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இவரது மகள் இல்திஜா முப்தி மேற்கொண்ட திருத்தப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதாவது எப்போதும் தடுப்புக்காவலிலேயே ஒருவரை வைத்திருக்க முடியாது ஏதாவது வழிவகை இருக்க வேண்டும் என்று மெஹ்பூபா மகள் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கட்சிக்கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டுமெனில் காஷ்மீர் அதிகாரிகளிடம் கோரிக்கை வையுங்கள் என்று மனுதாரருக்கு அறிவுறுத்தியது.

மேலும் மகள் இல்திஜா முப்தி மற்றும் உறவினர் ஒருவருக்கு முப்தியை சந்திக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

மக்கள் ஜனநாயகக் கட்சியான பிடிபியின் தலைவரான மெஹ்பூபா முப்தி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க உத்தரவுக்குப் பிறகே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT