இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியது.
மேலும் ஒரே நாளில் 70,589 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 61 லட்சத்தை கடந்தது. 9.47 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 96 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 61,45,291. புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 70,589 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா பலி எண்ணிக்கை 96 ஆயிரத்து 318 ஆக அதிகரித்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 776 பேர் பலியாகியுள்ளனர்
கரோனாவிலிருந்து நலம்பெற்றோர் எண்ணிக்கை 51 லட்சத்து ஆயிரத்து 397 ஆக அதிகரித்து 83.01% ஆக உள்ளது
தற்போது நாட்டில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 576 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர், இது மொத்த கரோனா பாதிப்பில் 15.42% ஆகும்.
கோவிட் பலி எண்ணிக்கை விகிதம் 1.57% ஆக உள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆக.7ம் தேதி 20 லட்சத்தையும், ஆக.23ம் தேதி 30 லட்சத்தையும் பிறகு செப்.5ல் 40 லட்சத்தையும், செப்.16-ல் 50 லட்சத்தையும் செப்.28-ல் 60 லட்சத்தையும் கடந்துள்ளது.
ஐசிஎம்ஆர் தகவல்களின் படி மொத்தமாக இதுவரை 7 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 41 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. திங்களன்று மட்டும் 11 லட்சத்து 42 ஆயிரத்து 811 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன.