டென்மார்க் பிரதமர் பிரெடெரிக்சன். 
இந்தியா

இந்தியாவின் கரோனா வைரஸ் நிலவரம் கவலையளிகக் கூடியதே: டென்மார்க் பிரதமர்

செய்திப்பிரிவு

இந்தியாவின் கரோனா வைரஸ் நோய் நிலவரம் மிகுந்த கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று டென்மார்க் பிரதமர் மெட்டி பிரெடெரிக்சன் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்கு இடையேயும் இருதரப்பு மாநாட்டில் இருநாடுகளும் பலதரப்பட்ட பிரச்சனிகளில் தீவிர கூட்டுறவுக்கு ஒப்புக் கொண்டுள்ளன. எரிசக்தி முதல் கரோனா பெருந்தொற்று வாக்சின் தயாரிப்பு வரை கூட்டுறவுக்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.

மெய்நிகர் கூட்டத்தில் டென்மார்க் பிரதமர் பிரெடெரிக்சன் கூறும்போது, “உங்கள் நாட்டு கரோனா சூழ்நிலை மிகமிகக் கடினமாக இருக்கிறது.” என்று கரோனா தொற்று எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்ததையடுத்து அவர் தெரிவித்தார்.

குஜராத்தில் டென்மார்க் நாடு செய்த முதலீட்டை பிரதமர் நரேந்திர மோடி தான் குஜராத் முதல்வராக இருந்த காலக்கட்டத்தை நினைவுகூர்ந்தார்.

இந்தியாவும் டென்மார்க்கும் சேர்ந்து பசுமை எரிசக்தி ஆற்றல் பூங்காவை அமைக்க வேண்டும், இதன் மூலம் டென்மார்க் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பூர்வமாகும் என்றார் பிரதமர் மோடி.

அதே போல் இந்தியா-டென்மார்க் திறன் வளர்ப்பு மையத்தை உருவாக்குவதன் மூலம் டென்மார்க் நிறுவனங்கள் இந்தியாவிலேயே தங்களுக்குத் தேவையானோரை தேர்வு செய்து கொள்ளலாம் என்பதையும் பிரதமர் மோடி முன்மொழிந்தார்.

இருதரப்பினரும் வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தியா-டென்மார்க் உறவுகளை பசுமை பொருளாதார, பாதுகாப்பு உறவாக மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கும் போது, மேக் இன் இந்தியா முயற்சியில் 140-க்கும் அதிகமான டென்மார்க் நிறுவனங்கள் இருக்கின்றன. நிறுவனங்கள் இந்தியாவில் உலகிற்காக உற்பத்தி செய்கின்றன என்றார் பிரதமர் மோடி. இருதரப்பினரும் பிராந்திய மற்றும் பன்னாட்டு உறவுகளை விவாதித்தனர்.

SCROLL FOR NEXT