இந்தியா

ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண் தீவிரவாதி விமான நிலையத்தில் கைது: துபாயிலிருந்து வரவழைத்த போலீஸாரின் சாமர்த்தியம்

என்.மகேஷ் குமார்

பேஸ்புக் மூலம் அறிமுகம் செய்து கொண்டு இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர்த்து வந்த பெண் தீவிரவாதியை, துபாயில் இருந்து சாமர்த்தியமாக வரவழைத்து ஹைதராபாத் போலீஸார், விமான நிலையத்தில் நேற்று கைது செய்தனர்.

பிரிட்டன் குடியுரிமையை பெற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த பெண்ணான நிக்கி ஜோசப் என்பவர், கடந்த சில ஆண்டுகளாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்ப்பு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வரும் இவர் சிரியா சென்று தீவிரவாத அமைப்பில் பயிற்சிகள் பெற்றுள் ளார். இவருக்கு 2011-ம் ஆண்டு ஹைதராபாத்தைச் சேர்ந்த முயாசுதீன் என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறி உள்ளது. இதனால் முயாசுதீனையும் தீவிரவாத அமைப்பில் சேர்க்க கடந்த ஜனவரி மாதம் இவர் துபாய் வழியாக சிரியா அனுப்ப முடிவு செய்தார். ஆனால், முயாசுதீன் துபாய்க்கு செல்ல முயன்ற போது, ஹைதராபாத் விமான நிலையத்தில் போலீஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், நிக்கி ஜோசப் குறித்து தெரிய வந்தது. துபாயில் இருக்கும் நிக்கி ஜோசப்பை ஹைதராபாத் வரவழைத்து கைது செய்ய போலீஸார் திட்டமிட்டனர்.

அதன்படி, அவரது காதலன் முயாசுதீன் மூலம் நிக்கி ஜோசப்பை நேற்று ஹைதராபாத் வரவழைத்தனர். அவர் விமானத்தில் வந்து இறங்கியதும், போலீஸார் நிக்கியை கைது செய்தனர். பின்னர் ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

நிக்கி ஜோசப், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், தனது காதலன் முயாசுதீனுடன் சேர்ந்து, பேஸ்புக் மூலம் பல இளைஞர்களை கவர்ந்து, தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துள்ளார் என கூறப்படுகிறது. இதுவரை கடந்த 4 ஆண்டுகளில் ஹைதராபாத் விமான நிலையத்தில் மட்டும், இது போன்று 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பேஸ்புக் மூலம் தீவிரவாத அமைப்பு குறித்து தெரிந்து கொண்டு, அதன்மூலம் சிரியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நிக்கி ஜோசப்பிடம் நடத்தப் படும் விசாரணையில், இதுவரை எத்தனை பேர் தீவிரவாத அமைப்புக்காக துபாய், சிரியா போன்ற நாடுகளுக்கு அனுப் பப்பட்டுள்ளனர், அவர்களுக்கு பிரதிபலனாக என்ன கொடுக்கப் பட்டது. இனி யார் அந்த பட்டியலில் இருப்பது, தற்போது ஆர்வமாக உள்ள இளைஞர்கள் யார், அவர்கள் எங்குள்ளனர்? போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என போலீஸார் நம்புகின்றனர்.

SCROLL FOR NEXT