டெல்லி, இந்தியா கேட் பகுதியில் ட்ராக்டர் எரிக்கப்படும் காட்சி. | படம்: சிறப்பு ஏற்பாடு. 
இந்தியா

புதுடெல்லி இந்தியா கேட் விவசாயிகள் போராட்டம்: ட்ராக்டரை எரித்ததால் 5 பேர் கைது 

செய்திப்பிரிவு

விவசாய மசோதாக்களை எதிர்த்து நாடு முழுதும் போராட்டங்களும் எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. இந்நிலையில் திங்களன்று புதுடெல்லி இந்தியா கேட் பகுதியில் ட்ராக்டர் ஒன்று எரிக்கப்பட்டது தொடர்பாக 5 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

இன்று கலாஇ 7.15 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.

இது தொடர்பாக புதுடெல்லி டிசிபி, எய்ஷ் சிங்கல், கூறிய போது இன்று காலை 7.15 மணியளவில் இந்தியா கேட் ராஜ்பாத் பகுதியில் 15-20 பேர் கூடினர். ட்ராக்டருக்கு இவர்கள் தீவைத்தனர். தீயணைக்கப்பட்டு ட்ராக்டர் அகற்றப்பட்டது.

இது தொடர்பாக 5 பேரைக் கைது செய்துள்ளோம். இந்தச் சம்பவத்தில் எஸ்யுவி கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைச் செய்தவர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அடையாளங்களை சரிபார்த்து வருகிறோம், என்றார்.

போலீஸார், நேரில் பார்த்தவர்களின் சாட்சிகளைக் கொண்டு கூறும்போது, ஒரு லாரியில் ட்ராக்டரை ஆர்பாட்டக்காரர்கள் கொண்டு வந்தனர். ராஜ்பாத் வந்தவுடன் அதை சாலையில் தள்ளினர். தீவைத்தனர். விவசாய மசோதாக்களுக்கு எதிராகக் கோஷமிட்டனர். பகத் சிங் படத்தையும் கையில் வைத்திருந்தனர்.

கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம், என்றார்கள்.

இதற்கிடையே பஞ்சாப் இளையோர் காங்கிரஸ் ட்ராக்டர் கொளுத்தப்பட்டதை லைவாக ஒளிபரப்பியதும் நடந்துள்ளது.

SCROLL FOR NEXT