கரோனா காலத்தில் விசாகப்பட்டிணத்தில் பாலிடெக்னிக் நுழைவுத் தேர்விலிருந்து வெளியே வரும் மாணவர்கள். | கே.ஆர்.தீபக். 
இந்தியா

மந்தை நோய்த் தடுப்பாற்றல் நிலையை இந்தியா எட்ட இன்னும் நீண்ட தொலைவு உள்ளது: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

பிடிஐ

இந்தியா ‘ஹெர்டு இம்யூனிட்டி’ என்ற மந்தை நோய்த்தடுப்பு நிலையை எட்ட இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐசிஎம்ஆர் நடத்திய செரோ சர்வே முடிவுகள் மக்கள் மத்தியில் அலட்சியப் போக்கை ஏற்படுத்தி விடக்கூடாது என்றார் ஹர்ஷ் வர்தன்.

அவர் மேலும் கூறியதாவது, வரவிருக்கும் 2வது செரோ சர்வேவை முன் வைத்துப் பார்க்கும் போது, ‘இன்னும் ஹெர்டு இம்யூனிட்டி நிலையை நாம் எட்டிவிடவில்லை என்பதை கவனமேற்கொண்டு அனைவரும் கோவிட்-19 விதிமுறைகளை, செயல்களை முறையாகத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.

மே, 2020, முதல் செரோ சர்வேயில் தேசிய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பு 0.73% தான் என்று கூறியது.

இந்நிலையில் ஹர்ஷ் வர்தன் கூறும்போது, ஆய்வு நோக்கில் மேற்கொள்ளப்படும் ரெம்டெசிவிர் மற்றும் பிளாஸ்மா சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும், மருத்துவமனைகளுக்கு இது தொடர்பாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அரசும் சமூகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே கோவிட் 19-லிருந்து மீளமுடியும். மாநில, யூனியன் பிரதேசங்கள் கோவிட்19 பரிசோதனைக்கான கட்டணத்தைக் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனியார் சோதனைமையங்களுடன் ஏற்பாடு செய்து கொண்டு கூடியமட்டில் கட்டணங்களை குறைக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்குவதோடு, ஏற்கெனவே உள்ள மருத்துவ உள்கட்டமைப்பையும் புதுப்பிக்க வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனைகளை புதிதாக உருவாக்குவதில் பிராந்திய சமச்சீரற்ற தன்மையைப் போக்கவே பிரதமர் ஸ்வஸ்த்யா சுரக்‌ஷா யோஜனா திட்டம் உள்ளது. இவ்வாறு ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT