இந்தியாவின் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை திங்களன்று 60 லட்சத்தைக் கடந்தது, புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் 82,170 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் கரோனாவிலிருந்து நலம்பெற்றோர் எண்ணிக்கையும் 50.17 லட்சமாக அதிகரித்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 74,893 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கரோனா தொற்று பலி எண்ணிக்கை மேலும் 1039 ஆக அதிகரிக்க ஒட்டுமொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 95 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது.
மொத்தம் 9 லட்சத்து 62 ஆயிரத்தி 640 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 15.85 சதவீதமாகும்.
மொத்த கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்து, 74 ஆயிரத்து, 702 ஆக அதிகரித்துள்ளது. 50 லட்சத்து 16 ஆயிரத்து 250 பேர் கரோனாவிலிருந்து நலம்பெற்றுள்ளனர்.
இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 82.58% ஆக உள்ளது. பலி எண்ணிக்கை வ்கிதமும் 1.57% ஆகக் குறைந்துள்ளது.
ஐசிஎம்ஆர் தகவல்களின் படி மொத்தம் 7.20 கோடி சாம்பில்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. ஞாயிறன்று மட்டும் 7.09 லட்சம் சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன.