பிஹார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறது. முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் நீடிக்க பாஜகவும் பச்சைக்கொடி காட்டி உள்ளது. இந்நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதன்படி, நிதிஷ் குமாரை சந்தித்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பதற்காக பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி அலுவலகம் முன்பு நேற்று அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர்.