இந்தியா

வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி: ராகுல் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், கட்சியினர் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது: காங்கிரஸ் தொண்டர்கள் ஓர் அணியாக இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான், மோடி வெளியேறிய பின் அந்த வெற்றிடத்தை நம்மால் நிரப்ப முடியும். இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. மூன்று முறை உத்தரவாதம் அளிக்கப்பட்டும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. மோடி தனக்குத்தானே அதிக சேதம் விளைவித்துக் கொள்கிறார். நமக்கான இடத்தை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். மோடி கீழிறங்கப் போகிறார். அவர் சென்றவுடன் அந்த இடத்தை நாம் நிரப்ப வேண்டும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் அனைத்துமே தலை மையால் முடிவெடுக்கப்படுகின்றன.

காங்கிரஸைப் பொறுத்தவரை, முடிவுகள் மேலிருந்து அறிவிக்கப் படுவதில்லை. காங்கிரஸ் ஒரு குடும்பம். காஷ்மீர் செல்லும் போதும், அலகாபாத் செல்லும் போதும் சொந்த ஊருக்குச் செல்வது போன்றே உணர்கிறேன்.

அனைவரிடமும் காங்கிரஸ் டிஎன்ஏ, சித்தாந்தம் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இழந்த நமது பெருமையை மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் தார்.

SCROLL FOR NEXT