இந்தியா

எகிறும் கரோனா எண்ணிக்கை: 58 லட்சத்தைக் கடந்தது, ஒரேநாளில் 86,052 பேருக்குத் தொற்று 

பிடிஐ

இந்தியாவின் தினசரி கரோனா தொற்று 90 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து தொடர்ந்து 5வது நாளாக குறைந்துள்ளதாகவும் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சத்தைக் கடந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளது.

சுமார் 47 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவிலிருந்து குணமடைய, கரோனாவிலிருந்து நலம்பெற்றவர்கள் விகிதம் 81.74% ஆக அதிகரித்துள்ளது.

மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சத்து 18 ஆயிரத்து 570 ஆக உள்ளது, ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை 86,052 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 92 ஆயிரத்து 290 ஆக அதிகரிக்கக் காரணம் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,141 பேர் பலியானதே.

நலம்பெற்றோர் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 56 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பலி விகிதம் 1.59% ஆகக் குறைந்துள்ளது. மொத்தம் நாட்டில் 9 லட்சத்து 70 ஆயிரத்து 116 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர், இது மொத்த பாதிப்பில் 16.67% ஆகும்.

இந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட் 7-ல் 20 லட்சமத்தையும், ஆகஸ்ட் 23-ல் 30 லட்சத்தையும், செப்.5ல் 40 லட்சத்தையும், செப்.16-ல் 50 லட்சத்தையும் கடந்தது.

ஐசிஎம்ஆர் தகவலின் படி இதுநாள் வரை 6 கோடியே 89 லட்சத்து 28 ஆயிரத்து 440 சாம்பிள்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. செப்.24ம் தேதி மட்டும் 14 லட்சத்து 92 ஆயிரத்து 409 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

ஒரேநாளில் 1141 பேர் பலியானதில் மகாராஷ்டிராவில் 459 பேரும் பஞ்சாபில் 76 பேரும், உ.பி.யில் 67 பேரும் தமிழ்நாட்டில் 66 பேரும், கர்நாடகாவில் 65 பேரும், மேற்கு வங்கத்தில் 62 பேரும், ஆந்திராவில் 52 பேரும், ம.பி.யில் 45 பேரும், டெல்லியில் 36 பேரும் பலியாகினர்.

மொத்தமாக 92,290 மரணங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து அதிக மரணங்களாக 34,345 மரணங்களைப் பதிவுசெய்துள்ளது தமிழகத்தில் 9076 பேர் பலியாகியுள்ளனர், கர்நாடகாவில் 8,331 பேர் இறந்துள்ளனர், ஆந்திரா 5558, உ.பி.யில் 5,366, டெல்லியில் 5,123, மேற்கு வங்கத்தில் 4,606, குஜராத்தில் 3,381, பஞ்சாபில் 3,066, ம.பி.யில் 2,122 பேர் என்று இறப்பு எண்ணிக்கை நிலவரம் உள்ளது.

SCROLL FOR NEXT