இந்தியா

மேற்கு வங்கம், உத்தரகண்ட், கேரளத்துக்கு அமைச்சர் பதவி இல்லை

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு இரு எம்.பி.க்கள் உள்ளனர். கேரளத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் உத்தரகண்ட், இமாசலப் பிரதேசத்தில் அனைத்து இடங்களையும் பாஜக வென்றது. எனினும் அங்குள்ள எம்.பி.க்களில் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்aலை.

அசாம், அருணாசலப் பிரதேசத்தில் இருந்து தலா ஒருவர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

நாகாலாந்து, மிசோரம், மேகாலயம், மணிப்பூர், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எவரும் மத்திய அமைச்சராகவில்லை.

SCROLL FOR NEXT