மணிப்பூர் சட்டசபையில் 3 மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து நேற்று 2-வது முறை யாக மக்கள் போராட்டம் நடத்தி னர். அமைச்சர் வீட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடந்தது.
மணிப்பூர் மக்கள் சிறுதொழில் செய்வதற்கு கடைகள் ஒதுக்கு வது, நில வருவாய் மற்றும் மறு சீரமைப்பு, மக்கள் பாதுகாப்பு ஆகிய 3 மசோதாக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மணிப்பூர் சட்டசபையில் நிறைவேற்றப்பட் டன. இதற்கு மணிப்பூர் பழங்குடி யின மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். பிற மாநிலங் கள் மற்றும் மணிப்பூர் எல்லையில் வசிக்கும் பழங்குயின மக்களுக்கு இந்த மசோதாக்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து கடந்த மாதம் 31-ம் தேதி மணிப்பூர் பழங்குடியின மாணவர் அமைப்பு கள் பேராட்டம் நடத்தின. மேலும் அமைச்சர்கள், எம்எல்ஏ.க்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். பல இடங் களில் தீ வைக்கப்பட்டது. அப் போது நடந்த வன்முறையில் 8 பேர் பரிதாபமாக பலியாயினர்.
இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலை யில், நேற்றுமுன்தினம் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஊரடங்கு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மசோதாக்களை கண்டித்து நேற் றும் 2-வது முறையாக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
சிங்கன்கட் என்ற இடத்தில் சப் டிவிஷனல் அலுவலகத்தை தீ வைத்து எரித்தனர். இந்த அலு வலகத்துக்குப் புதிய கட்டிடம் கட் டப்பட்டுள்ளது. பழைய கட்டிடத் தில் இருந்து பெரும்பாலான ஆவ ணங்களை புதிய கட்டிடத்துக்கு எடுத்து சென்று விட்டதால், தீயில் இருந்து அவை தப்பின என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுராசந்திப்பூர் மாவட்டத்தில் உள்ள சுகாதார துறை அமைச்சர் புங்சதாங் டான்சிங் வீட்டை நேற்றும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். ஏற்கெனவே கடந்த 31-ம் தேதி தாக்குதலில் அமைச்ச ரின் வீடு பெரிதும் சேதம் அடைந்தது. அசம்பாவித சம்பவங்கள் மேலும் பரவுவதை தடுக்க நேற்று அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை மட்டுமே ஊரடங்கு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.