கோப்புப் படம் 
இந்தியா

பிரதமர் மோடி - மஹிந்த ராஜபக்ச 26-ம் தேதி ஆலோசனை

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் செப்டம்பர் 26-ம் தேதி மெய்நிகர் முறையில் சந்தித்து பேசுகின்றனர்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் நட்புறவின் பின்னணியிலும் நடக்கும் இந்த மாநாடு, இருதரப்பு உறவுகளுக்கான விரிவான செயல் திட்டத்தை ஆராயும் வாய்ப்பை இரு தலைவர்களுக்கும் வழங்குகிறது.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் டிவிட்டர் பதிவு ஒன்றுக்கு பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு நட்புறவை விரிவாக ஆய்வு செய்ய தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

"கோவிட்டுக்கு பிந்தைய காலத்தில் நமது கூட்டுறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை நாம் ஆராயவேண்டும்," என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT