‘கால்டிராப்’ பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் செய லற்று இருப்பதால் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி யுள்ளது.
செல்போன்களில் பேசிக் கொண்டிருக்கும்போதே இணைப்பு பாதியில் துண்டிக்கப் படுகிறது. இதற்கு கால்டிராப் என்று பெயர். நிர்ண யிக்கப்பட்ட அளவை விட கால் டிராப் எண்ணிக்கை அதிகரித் திருப்பதால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயலாக இருக்கக்கூடும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இவ்விவ காரத்துக்கு தீர்வு காண முடியாததால் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது வலியுறுத்தி யுள்ளார்.
அவர் கூறும்போது, “செல் போன்களில் 5 நொடி கூட தொடர்ந்து பேசமுடிவதில்லை. அரசு நிறுவனங்களான எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் இணைப்புகளில் இப்பிரச்சினை அதிகம். இப்பிரச்சினைக்கு துறை யின் அமைச்சரால் தீர்வு காண முடியவில்லை.
இது அவரின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித் துள்ளார்.