மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்யா தாக்கரே: கோப்புப் படம். 
இந்தியா

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, எம்.பி. சுப்ரியா சுலே மீது புகார்: சிபிடிடி அமைப்பு விசாரிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை

பிடிஐ

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்யா தாக்கரே, தேசியவாத கட்சியின் எம்.பி.யும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே ஆகியோர் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாகப் புகார் எழுந்ததையடுத்து, அதை விசாரிக்க மத்திய நேரடிவரிகள் வாரியத்துக்கு (சிபிடிடி) தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்த 3 பேர் மீது ஏற்கெனவே பல புகார்கள் வந்ததால், அதுகுறித்து விசாரிக்க நேரடி வரிகள் வாரியத்துக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரடி வரிகள் வாரியம் விரைந்து விசாரிக்க, மீண்டும் நினைவூட்டல் கடிதத்தை தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே, சுப்ரியா சுலே ஆகிய 3 பேரும் வேட்புமனுத் தாக்கலின்போது அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்துகள் குறித்து முறையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125ஏ பிரிவின்படி, ஒருவர் வேட்புமனுத் தாக்கலில் தவறான தகவலைத் அளித்தது உண்மையென்றால், 6 மாதம் சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

கடந்த ஜூன் 16-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, வேட்புமனுத் தாக்கலின்போது தவறான தகவல் அளி்த்தல், கிரிமினல் குற்றம், சொத்துகளை மறைத்தல், கல்வித்தகுதியை மறைத்தல் போன்ற புகார்கள் படிப்படியாக எடுத்து விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT