இந்தியா

நொய்டாவில் பிரம்மாண்ட திரைப்பட நகரம்

செய்திப்பிரிவு

உத்தர பிரதேசத்தின் மீரட் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடம் காணொலி காட்சி மூலமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

உலக அரங்கில் இந்திய திரைப்படங்களுக்கு தற்போது சிறப்பான இடம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், நவீன வசதிகள் கொண்ட திரைப்பட நகரம் இந்தியாவில் அமைக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், இந்தியாவிலேயே மிக பிரம்மாண்டமான திரைப்பட நகரம் நொய்டா நகரில் அமையவுள்ளது. இதனால் உ.பி.இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

SCROLL FOR NEXT