இந்தியா

ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முன்கூட்டியே தொடங்க திட்டம்: அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல்

பிடிஐ

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதாவை நிறை வேற்றுவதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முன் கூட்டியே தொடங்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜி.எஸ்.டி. மசோதாவை அமல்படுத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. ஆனால் மசோதாவின் குறிப்பிட்ட சில அம்சங்களை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க் கிறது. இதனால் கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

ஜி.எஸ்.டி. மசோதாவுக்காக மழைக்கால கூட்டத் தொடர் நீட்டிக் கப்படலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் கூட்டத்தொடர் நீட்டிக்கப்படவில்லை.

இந்நிலையில் மசோதா குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு டெல்லியில் நேற்று கூறியதாவது:

ஜி.எஸ்.டி மசோதா விவகாரத் தில் காங்கிரஸ் கட்சி எதிர்மறை அரசியலில் ஈடுபட்டு வருகிறது. மசோதாவை நிறைவேற்ற மழைக் கால கூட்டத் தொடரை நீட்டிக்க முடியவில்லை. இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. எனினும் மசோதாவை நிறைவேற்றிவிட லாம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜி.எஸ்.டி. மசோதாவுக்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முன்கூட்டியே தொடங்கும்.

ஜி.எஸ்.டி. அமல்படுத்தப் பட்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் வரை உயரும். ஆனால் பிரதமர் மோடியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நாட்டின் வளர்ச்சியை அந்த கட்சி முடக்கி வருகிறது.

அரசியல் பழிவாங்கல் காரண மாகவே மழைக்கால கூட்டத் தொடரை காங்கிரஸ் முடக்கியது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடை பெறுகிறது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுவாக நவம்பர் 3-வது வாரம்தான் கூட்டத்தொடர் தொடங் கும். ஆனால் இந்த முறை அதற்கு முன்பாக மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

SCROLL FOR NEXT