இந்தியா

தூய்மை பணியில் என்சிசி மாணவர்கள்: அமைச்சர் பாரிக்கர் அழைப்பு

பிடிஐ

எதிர்கால இந்தியா தூய்மையாக வும் சுகாதாரமிக்கதாகவும் இருப்பது அவசியம். அதற்காக 10 லட்சம் பேரைக் கொண்ட தேசிய மாணவர் படையானது பிரதமரின் விருப்பத் திட்டமான தூய்மை இந்தியா இயக்கத்தில் இணையவேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

என்சிசி சார்பில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

ஒவ்வொரு என்சிசி மாணவரும் ஒரு கிலோ மக்காத குப்பையை சேகரிக்க முன்வந்தால் என்சிசி முழுமையுமாக சேர்ந்து 30 லட்சம் கிலோ குப்பையை அகற்றமுடியும். இதை தானாகவே முன்வந்து செய்யவேண்டும். அப்படி செய்தால் தூய்மை இந்தியா கனவு நனவாக முடியும்.

ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய யோகா பயிற்சி செய்து லிம்கா சாதனை புத்தகத்தில் என்சிசி மாணவர்கள் இடம் பிடித்ததற்கு பாராட்டுகள்.யோகா ஒழுக்கத்தை கற்றுத்தரும் பயிற்சி. வருமுன் தவிர்க்க விழிப் புணர்வுடன் இருந்தால் மருத்துவச் செலவு தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT