கரோனா பரவல் காலத்திலும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான தடுப்பு ஊசிகளும், மருந்துகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. இதை திமுக எம்.பியான கனிமொழி எழுப்பிய கேள்விக்கான பதிலில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சவுபே தெரிவித்தார்.
துத்துக்குடி எம்.பியான கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வின் குமார் சவுபே அளித்த எழுத்துபூர்வ பதிலில் கூறிருப்பதாவது: மத்திய அரசிிடம் உள்ள புள்ளிவிபரங்களின்படி, ஏப்ரல் முதல் ஜூன் 2019 வரையில் 58,14,588 குழந்தைகளுக்கு முழுமையான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இதே காலங்களின் 2020 வருடத்தில் 44,13,896 குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எத்தனை குழந்தைகள் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் தடுப்புமருந்துகளை தவற விட்டுள்ளனர் என்ற புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கரோனா பொதுமுடக்கக் காலத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோருக்கு தடுப்பு ஊசிகளும், மருந்துகளும் எப்படி வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுகரைகள எழுத்துபூர்வமாகவும், காணொளி வாயிலாகவும் மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.
இது குறித்த வழிகாட்டுதல்களும் மத்திய சுகாரத்துறையின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக, இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைள் பற்றியும், இதை செயல்படுத்துவதில் மாநில அரசுகள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெறுகின்றன.
பொதுமுடக்கக் காலத்தில் தடுப்பு மருந்துகள் தடையின்றி கிடைக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாள் இணை அமைச்சர் தெரிவித்தார்.