இந்தியா

ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்: கர்நாடக அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு தடை - பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

இரா.வினோத்

கர்நாடக மாநில அதிமுக உள்கட்சி தேர்தலில் முறை கேடு நடந்ததாக புகார் எழுந்த தையடுத்து, தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வருகிற 26-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கர்நாடக அதிமுக செயலாளர் வா.புகழேந்தி உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க பெங்களூரு மாநகர குடிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் வசிக்கும் வழக்கறிஞர் ஆர்.செல்வராஜ் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தனிச்செயலாளராக பணியாற்றியவர். இவர் தலை மையில் கர்நாடகாவை சேர்ந்த‌ 35 பேர் பெங்களூரு மாநகர குடிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 18-ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், “கர்நாடக மாநில அதிமுக உள்கட்சி தேர்தலில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இந்த‌ தேர்தல் தொடர்பாக கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி, உறுப் பினர் கருத்துகளை கேட்டு முடிவுகள் எடுக்கப்படவில்லை.

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, தேர்தல் தொடர்பாக 21 நாட்களுக்கு முன்பாக தேசிய நாளிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும். அதே போல தேர்தல் பார்வையாளராக கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்படவில்லை.

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தி, தமிழக அமைச்சர்கள் ரமணா, பழனியப்பன் மற்றும் அதிமுக எம்எல்ஏ மணிமாறன் ஆகியோரை அழைத்து வந்து வேட்பு மனுக் களை விநியோகித்துள்ளார்.

இது தொடர்பான எந்த அறிவிப்பும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கே தெரியாது. எனவே சட்ட விதிமுறைகளை மீறி, முறைகேடாக நடத்தப்படும் அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்''என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சூரியவம்சி, “அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சட்ட விதி முறைகளை பின்பற்றாமல் தேர்தல் நடத்துவது தவறானது. எனவே உள்கட்சி தேர்தல் நடத்த நிரந்தர தடை விதிக்கப்படு கிறது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தி, கர்நாடக மாநில தேர்தல் ஆணையர், முதன்மை தேர்தல் அதிகாரி ஆகிய நால்வரும் வருகிற 26-ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும்''என உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT