ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொத்து மற்றும் குடும்ப சொத்து விவரங்களை தொடர்ந்து 5 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். இம்முறை அவரது மகன் லோகேஷ் இந்த விவரங்களை ஹைதாராபாதில் நேற்று வெளியிட்டார்.
இதன்படி கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.46 கோடியாகும். இதில் சந்திரபாபு நாயுடுவுக்கு மட்டும் ரூ.42.4 லட்சம் சொத்துகள் உள்ளன. இவரது கடந்த ஆண்டு சொத்து மதிப்பு ரூ. 70.69 லட்சமாக இருந்தது. இது போல் சந்திரபாபு மனைவி புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ46.88 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.33.07 ஆக கோடி யாக குறைந்துள்ளது. லோகே ஷின் சொத்து ரூ.7.67 கோடி.