இந்தியா

முஸ்லிம், இடது சாரியாக இருந்தால் தேசத் துரோக வழக்கு, பாஜகவின் கபில் மிஸ்ரா, அனுராக், பர்வேஷுக்கு எதிராக ஏன் நடவடிக்கை இல்லை?- ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கேள்வி

செய்திப்பிரிவு

வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக சமூகச் செயல்பாட்டாளர்கள், விமர்சகர்கள் என்று சிறையில் தள்ளும் டெல்லி பொலீஸ் ஏன் பாஜகவின் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, என்று ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜூலியோ ரிபைரோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவாவுக்கு எழுதிக் கேட்ட ரிபைரோ, “நான் கூறிய 3 பாஜக தலைவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? இவர்கள் எதுவேண்டுமானாலும் பேச லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளதா? இதை எப்படிப் பார்த்தாலும் நியாயப்படுத்த முடியாது.

தவறு என்று தெரிந்ததை எதிர்த்து அமைதியான முறையில் போராடுபவர்களுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசலாம், தாக்கலாம், அச்சுறுத்தலாம் இல்லையா? பேச்சாளர்கள் இடது சாரிகளாகவோ முஸ்லிம்களாகவோ இருந்தால் உடனே தேச விரோத வழக்குப் பாயும்” என்று தன் கடிதத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரிபைரோ மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனர், ருமேனியாவின் இந்தியத் தூதராகவும் இருந்துள்ளார். குஜராத், பஞ்சாப் டிஜிபியாகவும் பணியாற்றியுள்ளார்.

டெல்லி கமிஷனர் ஸ்ரீவஸ்தவா, ஹர்ஷ் மந்தர், மற்றும் டெல்லி பல்கலை பேராசிரியர் அபூர்வானந்த் ஆகியோரின் தேசப்பற்றை சந்தேகிக்கிறார், ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும் இவர்கள் இருவருமே காந்தியவாதிகள். இந்த ஆட்சியில் காந்தியவாதிகளைக் கண்டால் பிடிக்கவில்லை என்று தெரிகிறது.” என்று சாடியுள்ளார்.

SCROLL FOR NEXT