டெல்லியில் அக்டோபர் 2-ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சொந்த ஊரான ரலேகான் சித்தியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், முன்னாள் ராணுவ வீரர்களின் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கோரிக்கையை ஆதரித்தும் காந்தி பிறந்த நாளன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருந்தேன்.
இதற்காக நாடு முழுவதும் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தேன். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு, ராணுவ வீரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் நிலம் கையக அவரச சட்டத்தை கைவிட் டுள்ளதால் எனது போராட்டத்தை நிறுத்தி வைக்கிறேன்.
லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகள் விரைவில் அமைக்கப்படாவிட்டால் புதிய போராட்டத்தை அறிவிப்பேன்.
இவ்வாறு ஹசாரரே கூறினார்.