இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில், 83,809 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49.3 லட்சத்தை தாண்டியுள்ளது.
79,292 பேர் கொரோனாவிலிருந்து மீண்டதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38.59 லட்சத்தை தாண்டியது. அதேபோல் மொத்த கரோனா பை எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்து 80,776 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 9 லட்சத்து 90 ஆயிரத்து 61 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர், இது மொத்த 49 லட்சத்து 30 ஆயிரத்து 236 பாதிப்பு எண்ணிக்கையில் 20.08% ஆக உள்ளது
ஐசிஎம்ஆர் தகவல்களின் படி இதுவரை 5.83 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. திங்களன்று மட்டும் ரூ.10.73 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது, அடுத்த இடங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலாம் இடத்தில் உள்ளது, பிரேசில், அமெரிக்கா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஆனால் பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா மோசமான பாதிக்கப்பட்ட 2ம் நாடாக உள்ளது. இறப்பு எண்ணிக்கையில் 3ம் இடத்தில் உள்ளது.
நேற்று 1054 பேர் மரணமடைந்ததில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 363 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகா 119, பஞ்சாப் 68, உ.பி. 62, ஆந்திரா 60, மேற்கு வங்கம் 58, தமிழ்நாடு 53, ம.பி.யில் 29, டெல்லி 26, ஹரியாணா 25, சத்திஸ்கர் 18, குஜராத், ஜம்மு காஷ்மீர் முறையே 17, கேரளா, உத்தராகண்ட் முறையே 15, ராஜஸ்தான், கோவாவில் முறையே 15 பேர் இறந்துள்ளனர்.
மேலும் அசாமில் 13, ஒடிஷாவில் 11, தெலங்கானாவில் 10, பிஹார், புதுச்சேரியில் முறையே 9, திரிபுராவில் 7, ஜார்கண்டில் 6, சண்டிகர், ஹிமாச்சலில் முறையே 5, சிக்கிமில் 2, அந்தமான், அருணாச்சல், மேகாலயா லடாக் ஆகிய இடங்களில் தலா ஒருவர் மரணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் அதிக பலியாக 29,894 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 2வது இடத்தில் தமிழகம், இங்கு 8,434 பேர் பலியாக, கர்நாடகாவில் 7384, ஆந்திராவில் 4972, டெல்லியில் 4770, உ.பியில் 4491, மேற்கு வங்கத்தில் 4003, குஜராத்தில் 3227, பஞ்சாபில் 2,424, மத்திய பிரதேசத்தில் 1791 பலி எண்ணிக்கையாக உள்ளன.