இந்தியா

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 1306.87 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள்: தர்மேந்திர பிரதான் தகவல்

செய்திப்பிரிவு

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 1306.87 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து மூலமான பதிலின் மூலம் மக்களவையில் இதைப்பற்றிய புள்ளிவிவரங்களை இன்று அளித்தார். அவர் கூறியுள்ளதாவது:

எட்டு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, செப்டம்பர் 2019-இல் அது எட்டப்பட்டது.

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 2020 வரை 1306.87 லட்சம் சமையல் எரிவாயு உருளைகளை உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

எரிவாயு உருளைகளை வாங்குவதற்காக ரூ 9670.41 கோடியை பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

2019-20-இல் உஜ்வாலா திட்ட பயனாளிகளின் ஒரு வருடத்துக்கான 14.2 கிலோ எரிவாயு உருளைகளின் பயன்பாடு 3.01 ஆகும்.

SCROLL FOR NEXT