நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் படையினர் நேற்று முகக்கவசம் அணிந்தபடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.படம்: பிடிஐ 
இந்தியா

சீன எல்லை பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சீன எல்லைப் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதை இந்தியா பொறுத்துக் கொள்ள முடியாது. எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் ஆக்கிரமிப்பு எதுவும் இல்லை என்று கூறுவதன் மூலம் நமது நாட்டை பிரதமர் மோடி பலவீனப்படுத்துகிறார். சீன எல்லைப் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் பிரதமர் விவாதிக்க வேண்டும். மேலும், வேளாண் துறை, வங்கித் துறை ஆகியவை பற்றியும் அரசின் நிலைப்பாடுகள் குறித்து நாடாளுமன்த்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.

1962-ம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரின்போது நமது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது. அப்போது மக்களவையில் இருந்த அப்போதைய பிரதமர், தனது அரசின் கொள்கைகள் குறித்து வாஜ்பாய் உள்ளிட்ட உறுப்பினர்கள் தெரிவித்த விமர்சனங்களை காதுகொடுத்து கேட்டார். இதுபோல பிரதமர் மோடியும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் அவர்களது கருத்துகளையும் கேட்க வேண்டும். பிரதமர் அவசரகால நிதியம் எப்படி முறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT