இந்தியா

வைரஸின் வரிசைகளைக் கணிக்கும் இணையம் சார்ந்த கோவிட் கணிப்பான்: இந்திய விஞ்ஞானிகள் முயற்சி

செய்திப்பிரிவு

கோவிட்-19 வைரஸ் தொற்றை எதிர் கொள்வதற்கான சிறந்த தீர்வை கண்டுபிடிப்பதற்காக, மரபணு மாற்றங்கள் மற்றும் வைரஸ் மற்றும் மனிதர்களில் சாத்தியமுள்ள மூலக்கூறு இலக்குகளைக் கண்டறிவதற்கு இந்தியா உட்பட உலகம் எங்கும் உள்ள சார்ஸ் கொவி2-வின் மரபியல் வரிசைகளை இந்திய விஞ்ஞானிகளின் குழு ஒன்று ஆராய்ந்து வருகிறது.

நாவல் கொரோனா வைரஸ் சவாலின் வேரை அடைவதற்காக அதை பல கூறுகளாகப் பிரித்து, பல்வேறு திசைகளிலிருந்து ஆராய்ந்து வரும் கொல்கத்தாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் துணைப் பேராசிரியர் டாக்டர் இந்திரஜித் சாஹாவும், அவரது குழுவினரும் இயந்திர கற்றலின் அடிப்படையில் வைரஸின் வரிசைகளைக் கணிக்கும் இணையம் சார்ந்த கோவிட் கணிப்பான் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அதோடு, 566 இந்திய சார்ஸ் கொவி2-வின் மரபியலையும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் சட்டப்பூர்வ அமைப்பான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் இந்த ஆய்வுக்கு நிதி உதவி அளித்துள்ளது.

SCROLL FOR NEXT